இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியின்போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
18 மாதங்களுக்கு முன்னர் நாடு முன்னொரு போதும் இல்லாத மிக மோசமான நெருக்கடிநிலையில் சிக்குண்டிருந்தது.
தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது. எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன – பண வீக்கம் மிகவேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. அநேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட் டன. மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள்.
இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. மின்துண்டிப்பும எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன.
பல இலங்கையர்களுக்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது. பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம்.
நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க.
இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில் விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் – என்றார்.