புத்தாண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை தடுக்கும் வகையில் கடந்த 3 ஆம் திகதி முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நேற்று வரை 1,320 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை வரை மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் திறக்கப்படும் மதுபானசாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.