உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. உண்மையை கண்டறிய வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.
விசேட பொறிமுறை ஊடான விசாரணைகள் ஊடாகவே உண்மையைக் கண்டறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்று கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல்களில் 300 பேர் உயிரிழந்தனர். 500 பேர் படுகாயமடைந்தனர். ஐந்தாண்டுகள் நிறைவடைந் துள்ளன. ஆனால், இதுவரை உண்மை பகிரங்கப்படுத்தப் பட வில்லை. நீதியும் கிடைக்கப்பெறவில்லை.
குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை. உண்மையைக் கண்டறிவதற்காக விசேட பொறிமுறை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.