ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அடுத்த மாதத் தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த பயணத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு துறைமுகத்தை கண்காணிப்பதிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் பயணத்தின் போது இருதரப்பு கடன் மறு
சீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.