நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்
போதைப் பொருட்களுடன் பெண்கள் 720 பேரும் ஆண்கள் 13 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 19 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களுக்கு அடிமையான 11 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார்
தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 152 கிராம் ஹெரோயின், 1,133
கிராம் ஐஸ், 379 கிராம் கஞ்சா, 16 கிராம் ஹெரோயின் மற்றும் 389 கிராம்
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.