யாழ்ப்பாணத்தில் தனக்கு, போதை ஊசி செலுத்தி 10 பேர் வரையான நபர்களைக் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், தன்னை சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கியது என்று 34 வயதான பெண் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
நல்லூருக்கு அண்மித்த பிரதேசத்தை சேர்ந்த 34 வயது பெண்ணே இவ் வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
குறித்த பெண் மனநல பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்.
இவரின், பெற் றோர் மரணமானதையடுத்து தனது மூத்த சகோ தரியுடன் வடமராட்சியிலுள்ள காப்பகம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவின்படி தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இவரின் மூத்த சகோதரி கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் பெண்ணின் சகோதரன் அவரை தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார்.
சகோதரனின் வீட்டில் வைத்தே தனக்கு இந்தக் கொடுமை இழைக்கப்பட்டதாகவும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 10 வரையான ஆண்கள் தனக்கு ஊசி செலுத்தி, சித்திரவதைகள் செய்து வன்புணர்வுக்கு உள்ளாக்கினர் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
அவரின் உடலில் சிகரெட்களால் சுடப்பட்ட அடையாளங்கள், தாக்கப்பட்டதற்கான தளும்புகள், தாக்கப்பட்டு கை முறிந்ததற்கான அடையாளமும் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், வடமராட் சியில் அவர் தங்கியிருந்த பாதுகாப்பு இல்லத்துக்கு சென்ற பின்னர், அங்கு தனக்கு நேர்ந்த கொடுமைகளை குறிப் பிட்டுள்ளார். இதையடுத்து, பருத்தித் துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் முதல்கட்ட விசாரணைகளை நடத்தினர். சம்பவம் நடந்த இடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால் விசாரணைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று முன்தினம் பருத்தித் துறை ஆதார மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
மேலும், இந்த வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன்னை வன்பு ர்வுக்கு உட்படுத்திய 10 பேரின் விவரங்களை வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.