தபால் திணைக்களத்தின் இணையத்தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட ஐந்து போலி இணையத்தளங்கள் நீக்கப்பட்டன என்று இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இணையத்தளங்களில் சுமார் முப்பத்தைந்து பண மோசடி சம்பவங்கள் பதிவாகின என்று அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோ பொல தெரிவித்தார்.