உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் அவசியம் – ஐ.நா வலியுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் அவசியம் - ஐ.நா வலியுறுத்தல்!

Editor 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் களில் கொல்லப்பட்டோரின் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நேற்று நடை பெற்றது.

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந் தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்விலேயே ஐ. நா. நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிரான்சே கலந்து கொண்டார்.

அவர் தனது உரையில், ‘

2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகளுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிப்பதற்கு முழுமையான வெளிப்படையான விசாரணைகள் அவசியம்.

இலங்கை தொடர்ச்சியாக பொறுப்புக்கூறல் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றது. அது பொறுப்புக்கூறலுக்கான (2009 இறுதிப் போர் தொடர்பான) பொறுப்புக்கூறலாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய மனித உரிமைகள் மீறலுக்கான பொறுப்புக் கூறலாக இருக்கலாம்.

நாடு முன்னோக்கி நகர வேண்டுமென்றால் இதற்குத் தீர்வு காண வேண்டும். உயர்நீதிமன்றம் தாக்குதலை தடுக்கத் தவறினார்கள் என்று முன்னாள் ஜனாதி பதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதி ராகக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இருந்தபோதிலும், பாதிக்கப் பட்டவர்கள் நீதிக்காக இன்னமும் காத்திருக்கின்றனர். சவால்களுக்குத் தீர்வை காண்பதற்கான முயற்சிகளின் ஒருபகுதியாக உயிர்த்த ஞாயிறு தாக்கு தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி காணப்படுதல் அவசியம் – என்றார்.

Share This Article