பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை குறைப்பதற்காக வெசாக் காலத்தில் மைத்திரி மாதம் என்ற தொனிப்பொருளில் பகிடிவதை எதிர்ப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க உயர்கல்வி அமைச்சு
தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பல்கலைக் கழகங்களில் பகிடிவதை சுமார் 85 வீதத்தால் குறைந்துள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பகிடிவதை தொடர்பான தண்டனைகளை அதிகரிப்பதன் மூலமும் விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.