வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடனேந்திரன் காலமானார்!

வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடனேந்திரன் காலமானார்!

editor 2

யாழ்ப்பாணம் வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நடனேந்திரன் சற்று முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார்.

இன்று அதிகாலை திடீர் சுகயீனமுற்ற அவர் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

அராலியை பூர்வீகமாகக் கொண்ட நடனேந்திரன், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவாகி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் நீண்டகால உறுப்பினராகச் செயற்பட்ட நடனேந்திரன் பின்னாட்களில் தமிழரசுக்கட்சியில் உறுப்பினராகி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தவிசாளராகத் தெரிவாகி செயற்பட்டிருந்தார்.

அண்மைய காலமாக தமிழரசுக்கட்சிக்குள் நிலவி வரும் குழு நிலை மோதல் போக்கு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதாகத் தீர்மானித்திருந்த நடனேந்திரன் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகத் தெரிவுக் கூட்டத்திலும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article