ஜனாதிபதித் தேர்தலும் பொதுத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது சிறப்பாக
அமையும். செலவுகளையும் கட்டுப்படுத்தலாம் என்று பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து
வெளியிட்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறியவை வருமாறு-
இவ்வருடம் ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் என்பன நடத்தப்படும். இந்த இரு தேர்தல்களையும்
முடிந்தால் ஒரே நாளில் நடத்துமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் கிட்டும்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது நல்லது. அதன்மூலம் செலவுகளையும் குறைத்துக்கொள்ளலாம். எந்தவொரு கட்சிக்கும் அநீதியும் ஏற்படாது.-என்றார்.