சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

editor 2

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை 03 வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு இன்று (செவ்வாய்கிழமை) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று சுகாதார அமைச்சின் கடிதம் கிடைத்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வைத்தியர்களுக்கு இணையான (டிஏடி) மற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு வீதத்தை போன்ற கொடுப்பனவில் 50% மே மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share This Article