இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் நாளை காலை நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்.
இதன்படி நாளை முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் அவர்களது சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.