13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்!

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்!

editor 2

9 மாகாணங்களிலும் நீடிக்கும் 13 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று பாராளுமன்றில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பரீட்சை நடத்தி, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும் ஆசிரியர் வகையின் அடிப்படையிலுமே ஆரம்பகட்டமாக 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பரீட்சையில் சித்தியடைந்த ஏனையவர்கள் தொடர்பில் இந்த நாட்களில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஏப்ரல் விடுமுறைக்கு பின்னர் அவர்களுக்கும் நியமனம் வழங்க முடியும் என
நம்புகிறேன்.

அதேநேரம் விஞ்ஞானம், கணிதம், தொழிநுட்பம், ஆங்கில பாடங்களுக்கு 2 ஆயிரத்து 700 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக பரீட்சை நடத்தி முடித்திருக்கிறோம். இந்த வாரத்துக்குள் அவர்களுக்கு அதன் பெறுபேறு களை வெளியிடவுள்ளோம். அவர்க ளுக்கு கல்வி அமைச்சின் கீழ் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

இதற்கு மேலதிகமாக நீதிமன்ற உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால் 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 9 மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தற்போது நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய பட்டதாரிகள் தொடர்பில் அரசாங்கம்
விரைவாக அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் – என்றார்.

Share This Article