இளைஞர் ஒருவரின் கையை வெட்டியதுடன், அதனை மீண்டும் பொருத்திவிடாது தடுக்கும் நோக்கில் துண்டான கையையும் வாள்வெட்டுக் கும்பல் எடுத்துச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் வடமராட்சி – புலோலி – வட்டுவனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் செல்வநாயகம் செந்தூரன் (வயது -30) என்பவரே கையை இழந்தவராவார்.
வாள்வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞரின் வீட்டுக்கு அண்மையாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்விரோதமே சம்பவத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.