யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
கண்டி – பல்லேகலை – தும்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் (செந்தில் – வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.