புனித வெள்ளி தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் உயிர்த்த ஞாயிறு தினமான 31ஆம்
திகதியும் நாட்டின் சகல கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வருபவர்களையும் அவர்கள் கொண்டு
வரும் உடைமைகளையும் சோதனையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சமூக பொலிஸ் குழுக்கள், அந் தந்த தேவாலயங்களின் பங்குத்தந்தை கள் மற்றும்
அமைப்பாளர்களுடன் இணைந்து வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி -பாதுகாப்பை உறு
திப்ப டுத்துமாறும் பொலிஸ் மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.