2024 வரவு – செலவு திட்டத்தில் கூறியவாறு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
தெரிவித்துள்ளார்.
இந்தத் தொகை ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக வழங்கப்படவுள்ள 10 கிலோ அரிசி,
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன் வழங்கப்படும்.
இதேவேளை, ஓய்வூதியக் கொடுப்பனவாக அதிகரிக்கப்பட்டுள்ள 2,500 ரூபாய் தொகை ஏப்ரல்
மாதம் முதல் வழங்கப்படும்- என்றும் அவர் தெரிவித்தார்.