ஆங்கில ஆசிரியர்கள் 2500 பேரை இணைத்துக் கொள்ள வேண்டுமென, தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அவசர தேவை கருதி, மூன்று வருட ஒப்பந்த காலத்துக்கு ஆங்கில மொழி மூல பாடங்களை கற்பிக்கக்கூடிய 1,000 தகுதி வாய்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் உடனடியாக இணைத்துக்கொள்ளவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
ஆங்கில மொழிமூல பாடசாலைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிப்பதாக அறிவித்த ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டளவில் குறைந்தது 200,000 மாணவர்களாவது ஆங்கில மொழிக் கல்வியைப் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.