IMF பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்க்கட்சிகள் சார்பில் சுமந்திரன் மட்டும் பங்கேற்பு!

IMF பிரதிநிதிகளுடனான சந்திப்பில் எதிர்க்கட்சிகள் சார்பில் சுமந்திரன் மட்டும் பங்கேற்பு!

editor 2

சர்வதேச நாணயநிதிய (ஐ. எம். எவ்.) பிரதிநிதிகளுடன் கலந்துரையாட எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் சுமந்திரன் எம். பி.
மட்டுமே பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலேயே சுமந்திரன் பங்கேற்hர்.

எனினும், இந்தக் கூட்டத்தில் வேறு எந்த எதிர்க்கட்சியின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்க வில்லை. நேற்றைய கூட்டத்தில், சர்வதேச நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்தினார்.

இந்த செயல்பாடுகள் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பான தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுமந்திரன் எம். பிக்கும் நாடாளுமன்றத்துக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதே அரசாங்கத்தின் விருப்பம் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளை சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்சுமந்திரன் உட்பட ஏனைய எதிர்க்கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்
திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இரு தரப்பு கடன் வழங்குநர்கள், வர்த்தக கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுகள் குறித்து திறைசேரியின்
செயலாளர் மகிந்த சிறிவர்த்தன, விரிவான விளக்கத்தை அளித்ததுடன், இந்தப் பேச்சு சுற்றுகளை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகை தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அதற்கானவிரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும்
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்த்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல
ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Share This Article