வடக்கு, கிழக்கில் தமிழர்கள்மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்களைத் தடுத்த நிறுத்த அயல், வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என்று ஒருங்கிணைந்த
தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி தினத்தில் பொலிஸாரின் அடக்குமுறைகளை
கண்டித்து நல்லூர் ஆதீன முன்றிலில் நேற்று திங்கட்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம்
நடைபெற்றது இந்தப் போராட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும்,
தமிழர்கள்மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள்மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்
கொள்ளப்பட்டு வருகின்றன. -நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு
விளங்குகிறது. இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணர்கின்றோம்.
இத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருக்கிறோம். இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல – அரசுக்கு ஆரோக்கியமான தல்ல. எனவே, நாங்கள் எங்கள்
உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம். இதனை அயல் மற்றும் வெளிநாடுகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன – காந்தி தேசம் பார்த்துக்
கொண்டிருக்கிறது. வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும். அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம் என்றார்.