விமானப்படையில் சேர யாழ்ப்பாணத்து இளைஞர்கள் 250 பேர் விண்ணப்பம்!

விமானப்படையில் சேர யாழ்ப்பாணத்து இளைஞர்கள் 250 பேர் விண்ணப்பம்!

editor 2

விமானப் படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘வான் சாகசம் 2024’ கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியின்போது, விமானப் படையில் சேர இளைஞர்கள் 250 இற்கும் மேற்பட்டோர விண்ணப்பித்துள்ளனர்.

விமானப் படையினர் மார்ச் 6 முதல் ‘வான் சாகசம்’ கண்காட்சியை நடத்தினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இந்தத் திட்டத்தை கருத்தில் கொண்டு விமானப்படை ஆட்சேர்ப்பு நிகழ்ச்சியை நடத்திய தாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து இளைஞர்கள் 250 இற்கும் மேற்பட்டோர் விமானப்படையில் சேர விண்ணப்பித்ததாகவும் கூறினார்.

‘100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 156 பேர் மற்ற பதவிகளைத் தேடும் ஆர்வத்தின் இந்த எழுச்சி, விமானப்படை பற்றிய சமூகத்தின் பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது,’ என்று அவர் கூறினார்.

அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை இலங்கை விமானப்படையில் சேரவும், விமானப்படையின் ஒரு பகுதியாகவும் அழைப்பு விடுத்தார்.

Share This Article