உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் 8,400 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர நியமனம் செய்யப்படவுள்ளனர்.