மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துபவர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை ஒரு வருடத்துக்கு தடை செய்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.
வீதி விபத்துகளை குறைப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்குமாறு கோரி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எழுதிய கடிதத்திலேயே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். விபத்துகள் காரணமாக, மருத்துவமனை அமைப்பும் கூடுதலான செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
விபத்துகளைத் தொடர்ந்து ஊனமுற்ற மக்கள் தங்கள் வருமானத்தை இழப்பதும் பொருளாதாரத்தை பாதிக்கிறது.
கடந்த ஆண்டு 2,200 விபத்துகள் மற்றும் 2,310 விபத்து தொடர்பான இறப்புகள் நிகழ்ந்தன. 6,1995 பேர் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் இதில், 9,725 பேர் சாதாரண காயங்களுக்கு
ஆளாகியுள்ளனர்.
வீதி விபத்துகளால் பெரும்பாலும் பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர். எனவே வழமைக்கு மாறாக அதிகரித்து வரும் விபத்துகளை குறைப்பதற்கு 11 பேர் கொண்ட விசேட தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.
நான்கு மாதங்களுக்குள் தெரிவுக்குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
போக்குவரத்து விபத்துக்களுக்கான காரணங்கள் மற்றும் திருத்தப்பட வேண்டிய சட்டப்பகுதிகள் ஆகியவற்றைக் கண்டறியும் பணியை தெரிவுக்குழு மேற்கொள்ளும். புதிய போக்குவரத்து சட்டங்களை அமுல்படுத்துமாறும், அபராதத்தொகையை அதிகரிக்குமாறும் கோருகிறேன்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாகவோ முழுமையாகவோ இரத்துசெய்ய வழிவகுக்கும் தகுதி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் – என்றும் அவர் கூறினார்.