காலி சிறைச்சாலையில் மீண்டும் மூளைக் காய்ச்சல்!

காலி சிறைச்சாலையில் மீண்டும் மூளைக் காய்ச்சல்!

editor 2

காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த நோயாளி தற்போது கராப்பிட்ட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டது.

அவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு வேறு எவருக்கும், மூளைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேநேரம், இந்த வருடத்தில் காலி சிறையில் மூளைக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர்.

கைதிகள் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நோயைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை சுகாதார பிரிவால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் தெரிவித்தார்.

Share This Article