ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தில்
பொதுக் கூட்டணியில் போட்டியிடவுள்ளார் என்று அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்பு கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேசிய வேட்பாளராக
போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பம். ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி தற்போது நிமல் லான்சா குழு மற்றும் பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிரேஷ்டர்கள் குழுவின் தலைமையி
லான பல சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்
போன்றவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய தொடர்பிலுள்ள
பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சின்னமான அன்னம் சின்னத்திலேயே
2010 தேர்தலில் சரத் பொன்சேகா, 2015இல் மைத்திரிபாலசிறீசேன, 2019இல் சஜித் பிரேமதாஸ ஆகியோர் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.