சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடாவும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தீர்மானத்தில் கையெழுத்திடும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தப் பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ஸவின் கட்சி, சிறீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.