சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை ஏனைய மூவருக்கும் ஏற்படவேண்டாம் – றொபேர்ட் பயஸ் உருக்கம்!

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை ஏனைய மூவருக்கும் ஏற்படவேண்டாம் - றொபேர்ட் பயஸ் உருக்கம்!

editor 2

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என றொபேர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப் பட்ட நளினி, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், சாந் தன் ஆகியோரை கடந்த 2022 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விடுவித்தது.

இதில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர் கள் என்பதால் அவர்கள் வீடுகளுக்கு சென்றனர்.

ஆனால், முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என் பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து சாந்தனின் இறப்பு குறித்து சிறப்பு முகாமில் உள்ள ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், திருச்சி சிறப்பு முகாம் சிறையை விட கொடுமையானது என்று கூறியுள்ள அவர், தன் மகனை ஒருமுறை யாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏங்கிய சாந்தனின் தாயிடம் உயிரற்ற உடலை தான் கொண்டு சேர்க்கப்போகிறோம்.

மேலும், நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை நோயாளிகளாக்கின.

சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை, சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும், தங்களின் கடைசி காலத்தை குடும்பத்தினருடன் செலவழிக்க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article