ஐ.நா தீர்மானங்களை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் அறிவித்தது!

ஐ.நா தீர்மானங்களை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் அறிவித்தது!

editor 2

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் இந்தத் தீர்மானங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைகளையும் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது.

அத்துடன், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் செயல்பாடுகள் உள்நாட்டு வாக்குவங்கி அரசியல் அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்குள் அகப்படக்கூடாது – என்று மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய காணொலி உரையில் தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது அமர்வு ஜெனிவாவில் நடக்கிறது. இதில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொலி அறிக்கை திரையிடப்பட்டது. இந்த உரையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

அந்த உரையில், இலங்கை கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும் மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆக்கபூர்வமான ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் வேலைத்திட்டங்களுடன் தொடர்ந்தும் தீவிரமாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு
வருகின்றது.

மனித உரிமைகள் பேரவைiயின் 46/1, 51/1 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இவற்றால் நிறுவப்பட்ட வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் மீண்டும் நிராகரிப்
பதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும், இவ்வாறான பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை – எதிர்மறையானவை
-பயனற்றவை மனித உரிமைகள் பேரவை நிறுவப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானவை – என்றும்
சொன்னார்.

பொருளாதார மீட்சி, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பில் நாடு அடைந்த உறுதியான முன்னேற்றம் பற்றிய கண்ணோட்டத்தையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.

குறுகியகால அரசியல் ஆதாயங்களை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நடைமுறை கொள்கை உள்ளது என்றும் இது விடயத்தில் எட்டப்பட்ட முன்னேற்றம் உள்நாட்டிலும்
சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டுள்ளது -என்றார்.

Share This Article