கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் மாணவர்களை வெளிப்புற பயிற்சிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அறிவித்தலை விடுத்த கல்வி அமைச்சு நாளை வெள்ளிக்கிழமை வரை இந்த அறிவிப்பை பின்பற்றுமாறும் அறிவித்துள்ளது.
இதன்படி, பாடசாலைக்கு வெளியே மாணவர்களை விளையாட்டு நிகழ்வுகள், உடற்பயிற்சிகள், மற்றும் மைதான நிகழ்வுகள் மற்றும் வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த வேண்
டாம் என்று வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஊடாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.