அதிதீவிர சிகிச்சையில் சாந்தன்!

அதிதீவிர சிகிச்சையில் சாந்தன்!

editor 2

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில் சாந்தன் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளாகி அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மயக்க நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே,

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் சமூக வலைத்தளத்தில் சாந்தன் காலமானதாக பதிவு ஒன்று வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article