ஜனாதிபதி ரணில் – பஷில் சந்திப்புக்கு ஏற்பாடு!

ஜனாதிபதி ரணில் - பஷில் சந்திப்புக்கு ஏற்பாடு!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பஸில் ராஜபக்ஷவும்
அடுத்த ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 3 இல் சந்தித்துப் பேசவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி ஆளும் கட்சியான சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய வருகின்றது.

கடந்த டிசெம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பஸில் ராஜபக்ஷ, ஜனவரி மாதம் நாடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

ஆனால், அவர் இன்றுவரை நாடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவர் இந்த வாரம் நாடு திரும்புவார் என்று சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்யவே பஸில் அவசரமாக நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நாடு திரும்பும் பஸில் ராஜபக்ஷ வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணிலை சந்தித்து பேச்சு நடத்துவார் என்றும் கூறப்பட்டது.

Share This Article