ஒரு வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இவர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ ஒரு துறையில் திறமைமிக்கவர்கள் என்று புலம்பெயர்ந்து செல்லும் இலங்கையர்கள் தொடர்பான
அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பெரும் நெருக்கடியால் இலங்கையர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் மாதாந்தம் வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் உயர்ந்திருந்தது.
இதன்படி, ஒரு வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் இலங் கையர்கள் நாட்டை விட்டு
வெளியேறுகின்றனர் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்கின்றனர்- என்றும் கூறப்பட்டுள்ளது.