யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நிலவும் காணிப் பிரச்னைகளை தீர்க்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள்
நடைபெறவுள்ளன.
நாளை மறுதினம் புதன்கிழமையும் மறுநாள் வியாழக்கிழமையும் இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் இரு மாவட்டங்களிலும் காணப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடமாடும் சேவைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.