பாடங்களின் எண்ணிக்கை குறைகிறது!

பாடங்களின் எண்ணிக்கை குறைகிறது!

editor 2

இலங்கையில் ஆறாம் தரத்துக்கு மேலான மாணவர்களுக்கு பாடசாலையில் கற்கக் கூடிய பாடங்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் 07 பாடங்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் வாழும் அந்தந்த மாகாணங்களுக்கு ஏற்ப பூர்வீக கைத்தொழில்களை இணைத்து எஞ்சிய 3 பாடங்களையும் கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், பாடசாலைகளுக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழில்நுட்ப அறிவை
பெற்றிருக்க வேண்டும் என்றும், அனைத்து வலயத்திலும் அமைக்கப்பட்டுள்ள கணினி வள மையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பாரிய வேலைத்திட்டம் தற்போது
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு கணினிப் பயிற்சி வழங்கும் அதே வேளை, மென்பொருள் உருவாக்கம் மற்றும் பழுது பார்ப்புப் பணிகளுக்காக பிராந்திய மட்டத்தில் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article