போருக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகள், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அது தொடர்பில் காணி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாக நீதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போது, இந்த விடயத்தை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச செயலாளர்களுக்கு உள்ள சட்டரீதியான அதிகாரம் மற்றும் இயலுமை குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.