தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை – ஜனாதிபதி!

editor 2

“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவகக் தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்ன ணியின் ‘நாட்டுக்கான ஒனறு பட்ட’ நடவடிக்கை என்ற தலைப்பிலான
முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

Share This Article