உளுந்து, பயறு, கௌபி, சோளம் மற்றும் குரக்கன் ஆகியவற்றுக்கு விசேட வர்த்தக பண்ட வரியை விதித்து நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
குறித்த பொருட்களை விவசாய அமைச்சின் அனுமதியுடன் மாத்திரமே இறக்குமதி செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து உளுந்து வகைகளுக்கும் இறக்குமதியின்போது, ஒரு கிலோகிராமுக்கு 300 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயறு, கௌபீ, மற்றும் குரக்கன் எனப்பவற்றுக்காகவும் 300 ரூபா விசேட பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் சோளத்துக்கு கிலோவொன்றுக்காக 25 ரூபாய் விசேட வர்த்தக பண்ட வரியாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலாகும் குறித்த பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தக பண்டவரி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.