நுண்நிதி கடன் பிரச்னையால் கிராமங்களைச் சேர்ந்த 28 இலட்சம் பேருக்குப் பாதிப்பு!

நுண்நிதி கடன் பிரச்னையால் கிராமங்களைச் சேர்ந்த 28 இலட்சம் பேருக்குப் பாதிப்பு!

editor 2

நுண்நிதி கடன் பிரச்னையால் கிராமப்புறங்களை சேர்ந்த 28 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38-48 சதவீத வட்டி என்ற அடிப்படையில் கடன் வழங்கப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் – இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பது தொடர்பான மேற்பார்வை குழு மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் வீட்டுப் பணிக்குச் செல்வதற்கு நுண் நிதி கடன் பிரச்னையும் பிரதான காரணமாக உள்ளது என்றும் அந்தக் குழு கூறியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணித்தல் பற்றிய துறை சார் மேற்பார்வைக் குழுவின் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி  வலேபொட தலைமையில் கூடிய போதே இந்த விடயம் வெளிப்பட்டது.

இந்தக் கூட்டத்துக்கு நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் நிறுவனங்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தன. 

மேலும், இலங்கை மத்திய வங்கி, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம், பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, நிறுவனப் பதிவாளர் திணைக்களம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

நுண்நிதிக் கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் பிரதிநிதிகளில் ஒருவர் கூறுகையில்,

நுண்நிதி நெருக்கடியால் 28 இலட்சம் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 24 இலட்சம் பேர் பெண்களாவர்.

இந்தக் கடன்கள் குறைந்த தொகையாக இருந்தாலும், கிராமப்புற மக்களால் அதனைச் செலுத்த முடியாதுள்ளது. இந்தக் கடன்களுக்கு 38 – 48 சதவீத வட்டி அறவிடப்படுகிறது.

இதனால், கிரா மப்புற பெண்களின் வாழ்க்கை முற்றாக மாறியுள்ளது.

இதனாலேயே, அதிகளவான கிராமப்புற பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச் செல்வதற்கு காரணமாகியுள்ளது.

மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழுள்ள வங்கி அல்லாத 6 பிரதான நிதிநிறுவனங்களில் கடன் பெற்ற பெருந்தொகையான குழுவினராலேயே நுண்நிதித் துறையில் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

நுண்நிதி கடனான 8 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன. கடன் பெற்றவர்களின் சொத்துகளை கையகப்படுத்துவதை இந்நிறுவனங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன – என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், உத்தேச சட்டமூலத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை.

இதனால் தாங்கள் மேலும் பிரச்னைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சுட்டிக்காட்டினர்.

உத்தேச சட்டமூலத்தை முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன்படி அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தாமல், மத்திய வங்கியும் நிதியமைச்சும் இணைந்து சட்டமூலத்தை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும், ஆறு பெரு நிதி நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் அது இருக்க முடியாது. இதன் ஊடாகப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் 30 – 40 இலட்சம் வரையிலான மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலே பொட தெரிவித்தார்.

Share This Article