வெப்பத் தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளத் தண்ணீரை அதிகம் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் தற்போது வெப்பமான வானிலை நிலவுகின்றது. எனவே, உடலில் நீரிழப்பு ஏற்படும்.
எனவே, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, பொது மக்கள் தொடர்ந்து அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
களைப்பு, தூக்கம், சோர்வு, தலைவலி, வாந்தி மற்றும் பசியின்மை ஆகியவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும் என்றும் கொழும்பு சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் சிறுவர் நோய் தொடர்பான மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மழையுடனான வானிலையை எதிர்பார்க்கலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போது சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்தாலும் ஏப்ரல் மாதம் வரையில் வறட்சி காலநிலை நிலவும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.