சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி மருத்துவமனைகள், மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசனை ஊட்டல் மற்றும் சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.