மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 (2023)க்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்றன.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக விடைத்தாள் திருத்துவோருக்கு வழங்கப்படும் ரூ.1,450 உதவித் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 (2024) க.பொ.த (உ/த) பரீட்சையின் பிரதான கண்காணிப்பாளர்கள், இணைகண்காணிப்பாளர்கள், தலைமை மேற்பார்வையாளர்கள் மற்றும் மேலதிக பிரதான மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கும் 2022 (2023) க.பொ.த (உ/த) பரீட்சைக்கான திருத்தப்பட்ட
கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.