தமிழரசுக்கட்சியின் நேற்றைய கூட்டமும் தோல்வி!

தமிழரசுக்கட்சியின் நேற்றைய கூட்டமும் தோல்வி!

editor 2

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் குகதாசன், சிறீநேசன் ஆகியோர் நேற்று வவுனியாவில் சந்தித்துப் பேசினர்.

கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்ற இந்த சந்திப்பில் இணக்கம் ஏதும் எட்டப்படவில்லை என்று அந்தக் கட்சி வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

முடிவு கிடப்பில் உள்ளபோதும் அந்தப் பதவிகுதெரிவான ச. குகதாசன், பொதுச் செயலர்
பதவியை கோரி வரும் ஞா. சிறீநேசன் மற்றும் இவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலுள்ள பா. அரியநேத்திரன், கோடீஸ்வரன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில், குகதாசனும், சிறீ நேசனும் பொதுச் செயலாளர் பதவியை தலா ஒரு
வருடத்துக்கு பகிர்ந்து கொள்ள இணங்கினர். எனினும், முதலில் யார் பதவி
வகிப்பது என்பதில் இணக்கம் காணப்படவில்லை.

இருவரும் பேசி எடுக்கும் முடிவுக்கு தாம் இணங்குவதாக கட்சியின் தலைவர் சிறீதரன் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த நிலையில் முடிவு எடுப்பதற்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நிறைவடைந்தது என்று தமிழ் அரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article