அமெரிக்க, ஐரோ, இந்தியத் தூதுவர்கள் சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கவில்லை!

அமெரிக்க, ஐரோ, இந்தியத் தூதுவர்கள் சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கவில்லை!

editor 2

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு
மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூவர்களும் இந்திய தூதுவரும் பங்குபற்றவில்லை.

இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா அல்லது அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் பங்கேற்கவில்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், தூதுவர்கள் பங்கேற்காததை ஜனாதிபதி யின் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், சுதந்திர தின நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டதாகவும் அழைப்பு விடுக்கப்பட்டதா இல்லையா என்று தமக்கு எதுவும் தெரியாது
எனவும் ஜனாதிபதி பணிமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சுடன் ஊடகங்கள் தொடர்பு கொண்ட போதும் உரிய பதில்
கிடைக்கவில்லை.

சுதந்திர தின நிகழ்வில் கொழும்பிலுள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தூதுவர்கள் பங்குபற்றுவது மரபாகும். எனினும், இம்முறை அவர்கள் பங்கேற்காதமைக்கு சீன சார்புடைய தாய்லாந்து பிரதமர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டமையே காரணம் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Share This Article