வெளிநாடு அனுப்புவதாக மோசடியில் ஈடுபட்ட போலி முகவர் யாழில் சிக்கினார்!

editor 2

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

வடமராட்சி – அல்வாயை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக்கூறி 23 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருக்கிறார் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி
வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்
என தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This Article