இலங்கை மின்சார சபையின் யோசனைக்கு அமைய 3.34 வீதமே மின்சார கட்டணம் குறைவடைகின்றது. இதன்படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் ஒரு ரூபாயே குறைவடைகின்றது.
இதேபோன்று, 31 – 60 அலகுகளுக்கு 2 ரூபாய் 50 சதமும், 61 – 90 அலகுகளுக்கு 2 ரூபாயும், 91 – 120 அலகுகளுக்கு 3 ரூபாயும் 121 – 180 அலகுகளுக்கு 2 ரூபாயும் குறைவடையும் என்று தெரியவருகின்றது.
இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய உத்தேச மின்கட்டண திருத்தத்தின் அடிப்படையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார சபை இந்த ஆண்டு 2 ஆயிரத்து 300 கோடி ரூபாயை இலாபமாக எதிர்பார்க்கிறது. இதனால், 3.34 வீத கட்டணக் குறைப்பை முன்மொழிந்துள்ளது.
இந்த மின்கட்டண குறைப்பு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது வீடுகளுக்கான மின்சார கட்டண நிர்ணயம் 0 – 30 அலகுகளுக்கு 12 ரூபாயாக உள்ளது. உத்தேச திருத்தத் தின்படி இது 11 ரூபாயாக அமையும்.
இதற்கான நிலையான கட்டணம் 185 ரூபாயில் இருந்து 165 ரூபாயாகக் குறைக்கப்படும். 31 – 60 அலகுகளுக்கான கட்டணம் 30 ரூபாயாக உள்ளது.
உத்தேச திருத்தத்தின்படி இது 27 ரூபாய் 50 சதமாக அமையும். நிலையான கட்டணம் 360 ரூபாயில் இருந்து 330 ரூபாயாகக் குறைக்கப்படும். 60 – 90 அலகுகளுக்கு 41 ரூபாயாக உள்ளது.
உத்தேச திருத்தத்தின்படி இது 39 ரூபாயாக அமையும். நிலையான கட்டணம் 480 ரூபாயிலிருந்து 455 ரூபாயாக நிர்ணயிக்கப்படும்.
90 – 120 அலகுகளுக்கான கட்டணம் 59 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும் நிலையான கட்டணம் ஆயிரத்து 180 ரூபாயிலிருந்து ஆயிரத்து 120 ரூபாயவும் குறைவடையும். 121 – 180 அலகுகளுக்கான கட்ட ணம் 59 ரூபாயிலிருந்து 57 ரூபாயாகவும் குறைவடையும்.
இதற்கான நிலையான கட்டணம் ஆயிரத்து 770 ரூபாயிலிருந்து ஆயிரத்து 700 ரூபாயாகக் குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று, கைத்தொழில் பிரிவின் கீழ் மாதாந்தம் 300 அலகுக ளுக்கு குறைவான மின்சார பாவனைக் கான தற்போதைய கட்டணமான 20 ரூபாயை 19.25 ரூபாயாக 75 சதத்தால் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிலையான கட்டணத்தை 15 ரூபாயால் 340 ரூபாயில் இருந்து 325 ரூபாயாக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் பிரிவின் கீழ் மாதாந் தம் 300 அலகுககளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவதற்கான தற்போதைய கட்டணமான 28 ரூபாவை 26.75 ரூபா யாக 1.25 ரூபாயால் குறைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிலையான கட்டணத்தை 50 ரூபாயால் 1,120 ரூபாயிலிருந்து 1,070 ரூபாயாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்களுக்கான கீழ் மாதாந் தம் 300 அலகுகளுக்கும் குறைவான மின்சார பாவனைக்கான தற்போதைய கட்டணமான 20 ரூபாயை 19.25 ரூபாவாக 75 சதத்தால் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய நிலையான கட்ட ணத்தை 15 ரூபாயால் 340 ரூபாயிலி ருந்து 325 ரூபாயாகக் குறைக்க முன் மொழியப்பட்டுள்ளது