பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் நாளாந்த அதிகரிக்கப்பட்டுவரும் பொருட்களின் விலைகளின் தொடராக பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.