கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியில் உள்ள கால்வாய்க்குள் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி, கல்மடு பகுதியை சேர்ந்த தயாளன் தனுசன் (வயது 20) மற்றும் அழகாபுரி பகுதியை கிருஸ்ணன் சதீசன் (வயது – 18) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜமீல், உயிரிழந்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டார்.
உறவினர்களால் சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.