கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து
37 ஆயிரத்து 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன. எனினும், மழை தொடர்வதால் வெள்ளப்பாதிப்பு
மேலும் அதி கரிக்கலாம் என்றும அஞ்சப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் 30 ஆயிரத்து 195 குடும்பங்களை சேர்ந்த 97 ஆயிரத்து 978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 வீடுகள் முழுமையாகவும் 143 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று
தெரிவிக்கப்பட்டது. சேனநாயக்க சமுத்திரத்தின் 110 அடியை கடந்துள்ளது.
இதனிடையே, அம்பாறை மாவட்டத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. இவ்வாறு, இடம் பெயர்ந்த குடும்பங்கள் 228 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 525 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 38 பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.