இடைநிறுத்தப்பட்டிருந்த ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி புனரமைப்பு திட்டத்தின் கீழ், தற்போது புனரமைப்பு பணிகள் பிற்போடப்பட்டுள்ள வீதிகளில் இந்த ஆண்டில் 15 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முழுமையான செலவு 20 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில், 6 மாதங்களில் குறித்த பணிகளை பூர்த்திசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆண்டின் முதல் 6 மாதங்களில், தெரிவுசெய்யப்பட்டுள்ள வீதிகளை போக்குவரத்துக்கு ஏற்புடைய வகையில் புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.